இது குறித்து, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் வெளியாகும் புதிய படங்கள் வெளியான தருணத்திலேயே, டிவிடி, விசிடிக்கள் இணையதளம் மூலம் வெளியாகிவிடுகிறது.
எனவே, தமிழக அரசு புதிய அணுகுமுறையின் மூலம், தொடர் கண்காணிப்பு மேற்கொண்டு இனி வரும் காலங்களில் இது போன்ற திருட்டு டிவிடி, விசிடி மற்றும் இணைய தளம் மூலம் புதிய படங்கள் வெளிவராமல் இருக்க தேவையான அனைத்து முயற்சிகளையும் செய்ய வேண்டும்.
எனவே, திரைப்படத் தயாரிப்பாளர்கள், கலைஞர்கள், தொழிலாளர்கள் ஆகியோரின் வாழ்வாதாரம் காப்பாற்றப்பட வேண்டும். மேலும், திரைப்படத் துறையையும் வளர்க்க வேண்டும் என கோரியுள்ளார்.