பத்தாம் வகுப்பு செய்முறை தேர்வுகள் தேதி? – தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு!

வெள்ளி, 1 ஏப்ரல் 2022 (13:51 IST)
தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை பயிற்சி தேர்வுகளுக்கான தேதியை அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த சில ஆண்டுகளாக ஆன்லைன் மூலம் தேர்வுகள் நடந்த நிலையில் இந்த முறை நேரடி தேர்வுகள் நடைபெற உள்ளது. 10,11,12 ஆகிய வகுப்புகளுக்கு மே மாதம் முதலாக பொதுத்தேர்வுகள் தொடங்கி நடைபெற உள்ளது.

அதற்கு முன்னதாக இந்த வகுப்புகளுக்கு அறிவியல் செய்முறை தேர்வுகள் நடைபெற உள்ளது. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவியல் செய்முறை பயிற்சி தேர்வுகள் ஏப்ரல் 25ம் தேதி தொடங்கி மே 2 வரை நடைபெற உள்ளது. செய்முறை தேர்வு மதிப்பெண்களை மே 4ம் தேதிக்குள் மாவட்ட கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்