பிரபாகரன் சிலையை அகற்றியதை கண்டித்து மதிமுகவினர் ஆர்பாட்டம்

புதன், 10 ஜூன் 2015 (11:19 IST)
நாகப்பட்டினம் அருகே, கோவிலில் இருந்த விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் சிலையை அகற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து  மதிமுகவினர் கறுப்புக்கொடி ஆர்பாட்டம் நடத்தி கைதானார்கள்.
 

 
நாகை மாவட்டம், பொய்கை நல்லூரில், விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை தெய்வமாக கருதி, சிலை அமைத்து, கோவிலுக்கு கும்பாபிஷேகமும் செய்தனர். இந்த செய்தி ஊடகங்களில் வெளியானது.
 
இதனால், அந்த கோவிலிலிருந்து, இரவோடு இரவாக சிலையை அகற்றும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டனர்.
 
தமிழக காவல்துறையின் இந்த செயலுக்கு மதிமுக, நாம் தமிழர் கட்சி, பாமக போன்ற பல்வேறு கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
 
இந்நிலையில், பிரபாகரன் சிலையை அகற்றியதைக் கண்டித்து, கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என மதிமுக  பொதுச்செயலாளர் வைகோ அறிவித்தார். 
 
அதன்படி பிரபாகரன் சிலையை அகற்றிய அதிமுக அரசைக் கண்டித்து, நாகையில், மதிமுக துணைப் பொதுச்செயலாளர் துரை.பாலகிருஷ்ணன் தலைமையில்,  கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட  500க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்