அதிமுக வேட்பாளருக்கு எதிராக போஸ்டர்

திங்கள், 11 ஏப்ரல் 2016 (23:01 IST)
சிவகங்கையில் அதிமுக வேட்பாளர் பாஸ்கரன் அம்பலத்திற்கு எதிராக போஸ்டர் ஓட்டப்பட்டுள்ளது.
 

 
வரும் சட்ட மன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை கடந்த சில தினங்களுக்கு முன்பு அக்கட்சியின் தலைமை அறிவித்தது. இதில், சிவகங்கை தொகுதிக்கு பாஸ்கரன் அம்பலம் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
 
இந்த நிலையில் சிவகங்கை தொகுதி வேட்பாளர் பாஸ்கரன் அம்பலத்திற்கு எதிரான வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள் மாவட்டம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளன.
 
சிவகங்கையில் அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளருக்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டப்பட்ட சம்பவம் அந்த தொகுதி முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்