இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியதாவது, “வெப்ப சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஒரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில், காஞ்சிபுரம், மதுராந்தகம், வேலூரில் தலா 4 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. செய்யூரில் 3 செ.மீ., மழையும், செஞ்சியில் 2 செ.மீ., மழையும் பதிவாகியுள்ளது." என்று கூறப்பட்டுள்ளது.