ரோமன் கத்தோலிக்க திருச்சபை, ஒரு பாலுறவுக்காரர்களை நடத்திய விதத்திற்காக அவர்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என போப் பிரான்ஸிஸ் தெரிவித்துள்ளார்.
ஒரு பாலுறவுக்காரர்களை மதிப்பிட, திருச்சபைக்கு எந்த உரிமையும் இல்லை எனவும் தேவாலயங்கள், அவர்களுக்கு மரியாதை வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் திருச்சபையால் ஒதுக்கி வைக்கப்பட்ட பெண்கள், ஏழைகள், மற்றும் கட்டாயக் குழந்தை தொழிலாளர்கள் ஆகியோரிடத்திலும் மன்னிப்பு கோர வேண்டும் என போப் தெரிவித்துள்ளார்.
ஒரு பாலுறவுக்காரர்கள் மத்தியில், சமீப வரலாற்றில் போப் பிரான்ஸிஸ் மிகவும் கருணையுள்ள போப்பாக பாராட்டப்படுகிறார்.
ஆனால் சில பழமைவாதக் கத்தோலிக்கர்கள், பாலியல் ஒழுக்கம் குறித்த தெளிவில்லாத கருத்துகளை அவர் கூறிவருவதாக விமர்சித்துள்ளனர்.