பொங்கல் சிறப்பு ரயில் முன்பதிவு: 5 நிமிடத்தில் டிக்கெட் காலி!
வியாழன், 29 டிசம்பர் 2022 (10:02 IST)
சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் பொதுமக்களின் வசதிக்காக 5 சிறப்பு ரயில்கள் குறித்த அறிவிப்பை தென்னக ரயில்வே சமீபத்தில் அறிவித்தது என்பதும் தெரிந்ததே.
சென்னையில் இருந்து நெல்லை கன்னியாகுமரி திருவனந்தபுரம் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை 9 மணிக்கு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனை அடுத்து ரயில்வே நிலையங்களில் பலர் வரிசையில் காத்திருந்த நேரத்தில் ஐந்தே நிமிடத்தில் ஆன்லைனில் அனைத்து ரயில்களையும் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டு விட்டதாக அறிவிக்கப்பட்டது.
இதனால் வரிசையில் காத்திருந்த பொதுமக்கள் கடும் ஏமாற்றம் அடைந்தனர். பொங்கல் பண்டிகை கொண்டாட சொந்த ஊர் செல்வதற்காக பொதுமக்கள் போட்டி போட்டுக் கொண்டு இந்த சிறப்பு ரயிலில் முன்பதிவு செய்துள்ளனர் என்பது இதிலிருந்து தெரிய வருகிறது