நடிகர்கள் துவங்கிய அரசியல் கட்சிகள்!. முதல் தேர்தலில் வாங்கிய வாக்குகள்!..
செவ்வாய், 21 ஏப்ரல் 2026 (19:12 IST)
இந்தியாவில் பல நடிகர்கள் அரசியல் கட்சியை துவங்கினார்கள். ஆனால் எல்லோருமே அரசியலில் பெரிய அளவில் வெற்றி பெற்றதும் இல்லை.. அரசியலில் நீடித்ததும் இல்லை.. சிலர் மட்டுமே அரசியலில் வெற்றி பெற்று முதல்வராக மாறினார்கள்.. பலரும் கட்சியை கலைத்துவிட்டனர். அந்த வகையில் நடிகர்கள் தொடங்கிய கட்சிகள் மற்றும் அந்த கட்சிகள் முதல் தேர்தலில் வாங்கிய வாக்குகள் என்ன என்பது பற்றி பார்ப்போம்.
திமுகவிலிருந்து பிரிந்து அதிமுக என்கிற கட்சியை துவங்கிய எம்.ஜி.ஆர் 1977ம் வருடம் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு 51,94, 876 வாக்குகளை பெற்று 130 தொகுதிகளில் வெற்றி பெற்று முதல்வராக அமர்ந்தார். 30.4 சதவீத வாக்குகளை அவர் பெற்றார்.
ஆந்திராவில் பிரபல நடிகராக இருந்த என்டி ராமராவ் தெலுங்கு தேசம் கட்சியை துவங்கி 1985ம் வருடம் முதல் தேர்தலில் போட்டியிட்டு 1,06,25,508 வாக்குகளை பெற்றார்
. 46.2 சதவீத வாக்குகளை பெற்று மொத்தம் 202 தொகுதிகளில் வெற்றி பெற்று அவர் ஆட்சி அமைத்து முதல்வரானார்..
நடிகர் விஜயகாந்த் தேமுதிகவை துவங்கி 2006ம் வருடம் முதல் தேர்தலை சந்தித்து 27,64,223 வாக்குகளை பெற்றார். ஆனால் ஒரு தொகுதியில் மட்டுமே அவர் வெற்றி பெற்றார். அவர் வாங்கிய வாக்கு சதவீதம் 8.4.
தெலுங்கு சினிமா நடிகர் சிரஞ்சீவி பிரஜா ராஜ்ஜியம் கட்சி என்கிற அரசியல் கட்சியை துவங்கி 2009ம் வருடம் முதல் தேர்தலை சந்தித்து 68,63,509 வாக்குகளை பெற்றார். 18 தொகுதிகளில் அவர் கட்சி வெற்றி பெற்றது. 16.3 சதவீத வாக்குகளை அவர் பெற்றிருந்தார்.
ஆனால் அதன்பின் அவர் அரசியலில் தொடராமல் கட்சியை காங்கிரஸில் இணைத்து விட்டார்..
சிரஞ்சீவியின் தம்பி பவன் கல்யாண் ஜனசேனா கட்சியை துவங்கி 2019ம் வருடம் முதல் பொதுத் தேர்தலில் போட்டியிட்டு 17,36,811 வாக்குகளை வாங்கினார். ஒரே ஒரு தொகுதியில்தான் வெற்றி பெற்றார்.. 5.5 சதவீத வாக்குகளை அவர் பெற்றிருந்தார்..
நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மையம் என்கிற அரசியல் கட்சியை தொடங்கி 2021ம் வருடம் முதல் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு 12,10,002 வாக்குகளை பெற்றார். அவர் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. 2.6 சதவீத வாக்குகளை அவர் பெற்றிருந்தார்..
தற்போது நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்கிற அரசியல் கட்சியை துவங்கி நடக்கவுள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார். அவர் எவ்வளவு வாக்குகளை பெறுவார்? எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறுவார்? எவ்வளவு வாக்கு சதவீதத்தை பெறுவார்? என்பது மே 4ம் தேதி தெரிந்துவிடும்.