நன்கொடை: அதிமுகவை மிஞ்சிய திமுக

வியாழன், 11 பிப்ரவரி 2016 (06:00 IST)
அதிமுக கட்சிக்கு கிடைத்த நன்கொடையைவிட திமுக பன்மடங்கு நன்கொடை பெற்று முதலிடம் பெற்றுள்ளது.
 

 
கடந்த 2010 முதல் 2014ம் ஆண்டு வரை கட்சிக்கு கிடைத்த நன்கொடைகள் குறித்த தகவலை தேர்தல் ஆணையத்திடம் திமுக மற்றும் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் சமர்ப்பித்துள்ளன.
 
இதில், கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை, அதிமுக ரூ. 4 கோடியே 17 லட்ச ரூபாய் மட்டுமே நன்கொடை பெற்றுள்ளது.
 
ஆனால், அதிமுகவை விட திமுக அதிக அளவு நன்கொடை பெற்றுள்ளது தெரிய வந்துள்ளது. அதன்படி, கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை, திமுக, 259 பேரிடமிருந்து ரூ.112 கோடி நன்கொடை பெற்றுள்ளது.
 
இதன் மூலம் நன்கொடை பெறுவதில் ஆளும் கட்சியான அதிமுகவை திமுக முந்திவிட்டது தெரிய வந்துள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்