அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ட்விட்டரில் வெளியிட்டுள்ள அந்த வீடியோவில் அனிதா அதிமுகவிற்கு ஆதரவாக பேசுவது போல டப்பிங் செய்யப்பட்டுள்ளது. இதற்கு மற்ற கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளதுடன் இதுகுறித்து மாஃபா பாண்டியராஜன் மீது தேர்தல் ஆணையம் வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.