குழந்தைகளை போலியோ பாதிப்பு ஏற்படாமல் காக்க போலியோ சொட்டு மருந்து வழங்குவது அவசியமானதாக உள்ளது. இன்று தமிழகம் முழுவதும் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை 43,051 இடங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடத்தப்பட்டன.
ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு தலைமை மருத்துவமனை, பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள் மற்றும் பொது இடங்களில் நடத்தப்பட்ட இந்த போலியோ சொட்டு மருந்து முகாம்களில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு சொட்டு மருந்து அளிக்கப்பட்டது.
இதுகுறித்து தற்போது அறிவிப்பை வெளியிட்டுள்ள தமிழக சுகாதாரத்துறை தமிழகம் முழுவதும் இன்று மொத்தமாக 56.34 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டுள்ளதாகவும், தமிழகத்தில் உள்ள 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளில் 98.18 சதவீதம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.