காவல்துறையினரின் சித்ரவதை: அரசுப் பேருந்து ஓட்டுநர் காவல் நிலையத்தில் தீக்குளிப்பு

புதன், 10 பிப்ரவரி 2016 (12:43 IST)
ராமநாதபுரம் மாவட்டத்தில் காவல்துறையினர் தன்னை சித்ரவதை செய்வதை தாங்க முடியவில்லை என்று கூறி அரசுப் பேருந்து ஓட்டுநர்  ஒருவர் காவல் நிலையத்திலேயே தீக்குளித்துள்ளார்.


 

 
ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடியை அடுத்து உள்ளது மென்னந்தி கிராமம்.
 
இநத் கிராமத்தைச் சேர்ந்தவர் கோபால். அரசுப் பேருந்து ஓட்டுநரான இவர் பணி முடிந்து வீட்டிற்கு சென்றுள்ளார்.
 
அப்போது, அவரது வீட்டிற்கு வந்த காவல்துறையினர் வழக்கு விசாரணைக்காக கோபால் மற்றும் அவரது மனைவியை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.
 
அவர்களை காவல்நிலையத்திற்கு கொண்டு சென்று இருவரையும் தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. அத்துடன், அவர்கள் இருவரையிம் அடித்தும் சித்ரவதை செய்துள்ளனர்.
 
இதனால் வேதனையடைந்த கோபால் காவல் நிலையத்திலேயே தனது உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
 
இதைத் தொடர்ந்து அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
 
இந்த சித்ரவதை சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்