தவணைக் கட்டாத விவசாயியை இரக்கமற்று தாக்கும் காவல்துறை [வீடியோ]

வியாழன், 10 மார்ச் 2016 (15:55 IST)
தஞ்சையில் நிதிநிறுவனம் மூலம் வாங்கிய டிராக்டருக்கு தவணை கட்டாத விவசாயியை காவல் துறையினர் தாக்கிய சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

 
தஞ்சாவூர் மாவட்டம் சோழகன்குடிகாடு கிராமத்தைச் சேர்ந்தவர் பாலன் (50). இவர் 2011ஆம் ஆண்டு தஞ்சை நகரில் உள்ள மகேந்திரா நிதி நிறுவனம் மூலம் ரூ. 3.80 லட்சத்திற்கு டிராக்டர் வாங்கியுள்ளார்.
 
டிராக்டர் வாங்கியதில் இருந்து முறையாக தவணை செலுத்தி வந்த பாலன் கடைசி இரண்டு தவணைகளை (ரூ.64 ஆயிரம்) மட்டும் கட்ட தவறியுள்ளார்.
 
இதனையடுத்து, நிதி நிறுவன ஊழியர்களும், காவல் துறையினரும் பாலனின் டிராக்டரை பறிமுதல் செய்ய சென்றுள்ளனர். அப்போது பாலன், தான் வாங்கிய டிராக்டரை பறிமுதல் செய்ய வேண்டாம் என்று கெஞ்சியதோடு, டிராக்டரை விட்டு கீழே இறங்க மறுத்திருக்கிறார்.
 
இதனால், ஆத்திரமடைந்த காவல் துறையினர் பாலனை பலமாக தாக்கிதோடு, வலுக்கட்டையமாக குண்டுகட்டாக தூக்கிச்சென்று காவல் துறையினரின் வாகனத்தில் ஏற்றியுள்ளனர். மேலும், அவரது டிராக்டரையும் பறிமுதல் செய்துள்ளனர்.
 
வீடியோ கீழே:
 
 


நன்றி : விகடன்

வெப்துனியாவைப் படிக்கவும்