காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதாரணி மீது போலீஸ் தாக்குதல்: மருத்துவமனையில் அனுமதி

வியாழன், 3 செப்டம்பர் 2015 (02:01 IST)
சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில், காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணி அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 
நாடு முழுவதும் நடக்கும் முழு வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு ஆதரவாக தீர்மானம் கொண்டு வரக் கோரி தமிழக சட்டப் பேரவையில் இருந்து திமுக, சிபிஐ, சிபிஎம், காங்கிரஸ், புதிய தமிழகம், மனித நேய மக்கள் கட்சியைச் சேர்ந்த அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.
 

 
பின்பு, அவர்கள் சட்டப் பேரவை முன்பு நடு ரோட்டில் ஆர்ப்பாட்டம் செய்ய முயன்றனர். இதை போலீசார் தடுத்தனர். இதனால் அவர்களுக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
 
மேலும், போலீஸாரால் வைக்கப்பட்டு இருந்த தடுப்பை கடக்க முயன்ற போது போலீஸாரால் காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணி தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
 
இதனால், அங்கு நின்ற போலீசாருடன் விஜயதரணி எம்.எல்.ஏ. கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். இதனையடுத்து, அவர் சிகிச்சைக்காக ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 
 

வெப்துனியாவைப் படிக்கவும்