மெரினாவில் சுற்றிப்பார்க்க வந்தவரை போராட்டக்காரர் என போலீஸ் செய்த அட்டூழியம்

திங்கள், 22 மே 2017 (16:04 IST)
மெரினாவில் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை முன்னிட்டு பேரணி செல்ல முயன்றவர்களை கைது செய்த காவல்துறையினர், சுற்றிப்பார்க்க வந்த வெளிமாநிலத்தவரையும் சேர்ந்து கைது செய்துள்ளனர்.


 

 
முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை முன்னிட்டு மே17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி, இயக்குநர் கவுதமன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் ஆகியோர் உள்பட 281 பேர் மெரினாவில் பேரணி செல்ல முயன்றனர். அப்போது காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர். 
 
அதில் மெரினாவுக்கு சுற்றிப்பார்க்க வந்த வெளிமாநிலத்தவர் ஒருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களை கைது செய்து வாகனத்தில் ஏற்றி அழைத்து சென்றுள்ளனர். வாகனத்தில் இருந்த வெளிமாநிலத்தவரை பார்த்து யாரென்று கேட்டுள்ளனர். விசாரித்தபோது அவர் கூறியதாவது:-
 
ஞாயிற்று கிழமை என்பதால் மெரினாவிற்கு சுற்றி பார்க்க வந்தேன். என்னையும் சேர்த்து தூக்கிடாங்க. நான் சென்னை சென்ட்ரலில் வேலை செய்து வருகிறேன், என்றார்.
 
இவர் பேசியதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் போராட்டக்காரர்கள் வெளியிட்டுள்ளனர். தற்போது இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. மேலும் காவல்துறையினர் அவரை கைது செய்த காரணம் தெரியவந்துள்ளது. அவர் கருப்பு நிற ஆடை அணிந்திருந்ததால் காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்