இந்நிலையில், அவரது உடல் நிலை குறித்து ஏராளமான வதந்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது. முக்கியமக, சமூக வலைத்தளங்களில் ஏராளமான வதந்திகள் பரவி வருகிறது. அப்படி வதந்தி பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக காவல் துறை எச்சரித்துள்ளது.
மேலும், இதற்காக தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலக மத்திய குற்றப்பிரிவினர் மற்றும் சைபர் கிரைம் போலீசார் ஆகியோர் இதை கண்காணித்து வருகின்றனர். ஏற்கனவே, 2 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். 42 பேர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது.
அதன்பின், நாமக்கல்லை சேர்ந்த சாப்ட்வேட் இன்ஜினியர் சதீஷ், மதுரையை சேர்ந்த மாடசாமி ஆகியோரை கடந்த 10 தேதி போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், தூத்துக்குடியை சேர்ந்த தனியார் வங்கி ஊழியர் திருமணி செல்வம், ஆண்டனி சேசுராஜ் மற்றும் சென்னையை சேர்ந்த ஒரு தனியார் நிறுவன ஊழியர் பாலசுந்தரம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.