பீட்டா பூர்வா ஜோஷிபுரா எங்கிருந்தாலும் வரவும் - பழனி பாரதி சவால்

புதன், 1 பிப்ரவரி 2017 (14:29 IST)
தமிழக இளைஞர்கள் நடத்திய போராட்டத்தின் விளைவாக தமிழக அரசு, ஜல்லிக்கட்டிற்கான அவசர சட்டத்தை கொண்டுவந்தது.


 

 
இந்த போராட்டம் நடைபெற்ற போது, எவ்வளவு போராட்டம் நடத்தினாலும், தமிழகத்தில் ஜல்லிக்கட்டை நடத்தவே முடியாது என பீட்டா இந்திய அமைப்பின் சி.இ.ஓ. பூர்வா ஜோஷிபுரா கருத்து தெரிவித்தார்.
 
இந்நிலையில், அவசர சட்டம் நிறைவேறி, ஜனாதிபதி ஒப்புதலும் கிடைத்து அந்த சட்டம் நிரந்தரமாகிவிட்டது. மேலும், இந்த சட்டத்திற்கு தடை விதிக்க முடியாது என உச்ச நீதிமன்றமும் கூறிவிட்டது. 
 
எனவே, வருகிற 10ம் தேதி மதுரை அலங்காநல்லூரில் கோலகலமாக ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ளது. இந்நிலையில், திரைப்பட பாடலாசிரியருமான, ஜல்லிக்கட்டு ஆதரவாளருமான கவிஞர் பழனிபாரதி தன்னுடைய முகநூல் பக்கத்தில், 
 
“வெளிப்படையாக நான் சவால் விடுகிறேன்.... தமிழர்கள் ஜல்லிக்கட்டை நடத்தவே முடியாது'' என்ற 'பீட்டா' பூர்வா ஜோஷிபுரா  எங்கிருந்தாலும் அலங்கா நல்லூர் வாடிவாசலுக்கு வரவும்...” எனக் குறிப்பிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்