போயஸ் கார்டனின் வாரிசு: ஜெயலலிதாவும், தீபாவும்!

வெள்ளி, 7 அக்டோபர் 2016 (10:54 IST)
தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை பார்க்க சென்ற ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயகுமாரின் மகள் தீபாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.


 
 
ஜெயலலிதாவின் இரத்த சொந்தமான தீபாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது நேற்று பரபரப்பாக பேசப்பட்டது. எனது அத்தையை பார்க்க வேண்டும், அவரது கையை பிடித்து ஆறுதல் கூறவேண்டும். ஒரு சிலர் என் அத்தை நான் சந்திப்பதை தடுக்கின்றனர் என ஆதங்கத்துடன் கூறினார்.
 
ஜெயலலிதாவின் அண்ணன் திருமணம் முடிந்தவுடன் அவரது மனைவி விஜயலட்சுமியுடன் போயஸ் கார்டனில் ஜெயலலிதாவுடன் வசித்து வந்துள்ளார். அங்கு தான் தீபா பிறந்துள்ளார். பின்னர் ஜெயலலிதாவுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக போயஸ் கர்டனில் இருந்து வெளியேறிய அந்த குடும்பம் அதன் பிறகு அங்கு நுழையவே முடியவில்லை.
 
பலமுறை போயஸ் கார்டன் சென்று தனது அத்தை ஜெயலலிதாவை பார்க்க முயன்றார் தீபா ஆனல் முடியவில்லை. அண்ணன் ஜெயகுமார் இறந்த போது நேரில் சென்று ஆறுதல் கூறினார் ஜெயலலிதா. ஆனால் ஜெயகுமாரின் மனைவி விஜயலட்சுமி இறந்த போது ஜெயலலிதா வருவார் என எதிர்பார்த்தனர், ஆனால் அவர் செல்லவில்லை.
 
சமீபத்தில் திருமணம் செய்துகொண்ட தீபா தனது கணவருடன் போயஸ் கார்டன் சென்று வாழ்த்து பெற்றார். அவருக்கு முதல்வர் பிளாட் ஒன்றை பரிசாக வழங்கினார் எனவும் கூறப்படுகிறது. முதல்வர் சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயிலுக்கு சென்று வந்த பின்னர் தீபா அவரை பார்க்க பலமுறை முயற்சித்தும் முடியவில்லை.
 
ஒரு முறை போயஸ் கார்டனுக்கு சென்று அத்தை ஜெயலலிதாவை பார்க்க முயற்சித்த போது அவர் தடுத்து நிறுத்தப்பட்டார். எதற்காக ஜெயலலிதாவை சந்திக்க வேண்டும் என்ற காரணத்தை கேட்டுள்ளனர். அதற்கு பதில் அளித்த தீபா, போயஸ் கார்டன் சொத்துக்கு நான்தான் உண்மையான வாரிசு. எங்க பாட்டி சந்தியா தெளிவாக உயில் எழுதி வச்சிருந்தாங்க.
 
அவங்களோட மகன், மகள் வயிற்றுப் பேரன், பேத்திகளுக்குத்தான் இந்தச் சொத்து சொந்தம். அப்படிப் பார்த்தா நான்தான் இந்த வீட்டு எஜமானி. நான் இங்க இருக்கிற என்னோட அத்தையைப் பார்க்கனும். அவங்களப் பார்க்க விடாம தடுக்க நீங்கள்லாம் யாரு என்று கேட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்