ஜெயலலிதா வாழ்ந்த வீடு மக்கள் பார்வைக்கு அனுமதி

புதன், 7 டிசம்பர் 2016 (16:09 IST)
புரட்சித் தலைவி ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்டம் வீட்டை பொதுமக்கள் வெளியில் இருந்து பார்க்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


 

 
ஜெயலலிதாவுக்கு நேரடி வாரிசு இல்லை என்பதால், அவர் வாழ்ந்த போயஸ் தோட்டம் வீட்டை நினைவுச் சின்னமாக மாற்ற வேண்டும் என்று ஏற்கனவே இணையதளத்தில் கோரிக்கை எழுந்தது. அதற்கு சுமார் 2500 பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
 
இந்நிலையில் அவர் வாழ்ந்த போயஸ் தோட்டம் வீடு, பொதுமக்கள் வெளியில் இருந்து பார்க்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பும் அதிமுக தொண்டர்கள், நேராக செல்லும் இடம் போயஸ் தோட்டம் தான். 
 
வருகை தரும் அதிமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்களை தடுக்காமல், வெளியில் இருந்து மட்டும் பார்க்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்