இதில், சிலைகளுக்கு மாலை அணிவிப்பது குறித்தும், கட்சியினரை பார்த்து கும்பிடுவது, பொது மக்களை பார்த்து கும்பிடுவது போன்றவைகளை செய்வது குறித்த அறிவுரைகளை வழங்கினார் தம்பிதுரை. அவர் சொன்னது போலவே அமைச்சர் விஜயபாஸ்கர் செய்து காட்டி, தம்பிதுரையிடம் பாராட்டு பெற்றார்.
இந்த சம்பவத்தை மையப்படுத்தி, இதற்கு தனியாக பயிற்சிக் கல்லூரி அமைத்து, கட்டணம் கூட நிர்ணயித்து விடலாம் என தனது டுவிட்டர் பக்கத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், நக்கல் நையாண்டி செய்துள்ளார்.