கடற்படை தளத்தில் மோடிக்கு முதல்வர் வரவேற்பு! – பயணத் திட்டம் இதுதான்!

வியாழன், 26 மே 2022 (16:36 IST)
பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைக்க சென்னை வரும் பிரதமர் மோடியை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடற்படை தளத்தில் வரவேற்க உள்ளார்.

தமிழ்நாட்டில் பல்வேறு நலப்பணி திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி இன்று சென்னை வருகிறார். சென்னை நேரு விளையாட்டு அரங்கில் இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ள நிலையில் சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி பயணிக்கும் சாலையில் அவரை வரவேற்க மக்கள் கூட்டமாக காத்திருக்கின்றனர். தெலுங்கானாவிலிருந்து விமானம் மூலமாக சென்னை விமான நிலையம் வரும் பிரதமர் மோடிக்கு அமைச்சர் துரைமுருகன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.

பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக அடையாறு ஐ.என்.எஸ் கடற்படை தளத்திற்கு பிரதமர் மோடி வந்தடைகிறார். அங்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரை வரவேற்கிறார். ஆளுனர், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும் அவரை வரவேற்கின்றனர்.

பின்னர் அங்கிருந்து காரில் செல்லும் பிரதமர் மோடி நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்