பள்ளிக்கு பாக்கெட் சாராயம் கொண்டு வந்த பிளஸ் 2 மாணவர்: ஆசிரியர் அதிர்ச்சி!

Webdunia
சனி, 24 செப்டம்பர் 2022 (13:55 IST)
பள்ளிக்கு பாக்கெட் சாராயம் கொண்டு வந்த பிளஸ் 2 மாணவர்: ஆசிரியர் அதிர்ச்சி!
பிளஸ் டூ படிக்கும் மாணவர் ஒருவர் தள நண்பர்களுக்காக பாக்கெட் சாராயம் கொண்டு வந்த சம்பவம் கள்ளக்குறிச்சி அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு உதவி பெறும் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வரும் நிலையில் மாணவர் ஒருவர் புத்தகப்பையை ஆசிரியர் சந்தேகத்தின் பேரில் சோதனை செய்ததில் அதில் பாக்கெட் சாராயம் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்
 
இதனையடுத்து அந்த மாணவரிடம் ஆசிரியர் விசாரணை செய்தபோது நூறு ரூபாய் கொடுத்து இந்த சாராயத்தை வாங்கி வந்ததாகவும் தனக்கும் தனது நண்பர்களுக்கும் கொடுக்க கொண்டு வந்ததாகவும் தெரிவித்து இருந்தார் 
 
இதனையடுத்து சம்பந்தப்பட்ட 3 மாணவர்களின் பெற்றோர்களையும் பள்ளிக்கு வரவழைத்து அவர்களிடம் விசாரணை செய்யப்பட்டது. மேலும் இந்த மூன்று மாணவர்கள் தொடர்ந்து இந்த பள்ளியில் படித்தால் மற்ற மாணவர்களையும் கெடுத்து விடுவார்கள் என்பதால் மூன்று மாணவர்களின் டிசியையும் பள்ளி நிர்வாகத்தினர் பெற்றொரிடம் வழங்கியதாக கூறப்படுகிறது. இதனால் மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பள்ளி நிர்வாகம் நிர்வாகத்தினர் மத்தியில் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்