ஜெயலலிதா தோழி பழனி கோவிலில் திடீர் தரிசனம்: பக்தர்களுக்கு தடை

வியாழன், 11 பிப்ரவரி 2016 (21:10 IST)
பழனி முருகன் கோவிலில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா வருகையால் பக்தர்களுக்கு இரண்டு மணி நேரம் தரிசனம் தடை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கோவிலில் இருந்த பக்தர்கள் அதிருப்தி அடைந்தனர்.



 
 
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பிரபல பழனி முருகன் கோவிலில் சசிகலாவின் வருகை தருகிறார் என்ற தகவல் காலை முதல் கோவில் முழுவதும் பரவியது. இதையோட்டி, பழனி கோவில் வளாகம் முழுவதும் பரபரப்பாக இருந்தது. மேலும், அதிமுக கட்சியைச் சேர்ந்த பிரமுகர்களும் வந்து இருந்தனர்.

இதனால் காவல்துறையினர் பலத்த பாதுகாப்பில் கோவில் முழுவதும் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் மதியம் சரியாக 12 மணியளவில் கோவிலுக்கு வந்த சசிகலாவிற்கு கோவில் சார்பில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. 
 
இந்நிலையில், இவரது வருகையையொட்டி இரண்டு மணி நேரம் பக்தர்களுக்கு தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டது. ஆனால், இன்று கூட்டம் அதிகம் இல்லாத நிலையிலும்,  சசிகலாவின் வருகையையொட்டி இரண்டு மணி நேரத்திற்கு மேலாக தரிசனத்திற்கு காக்க வைக்கப்பட்டதால் பக்தர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்