பிச்சாட்டூர் அணை திறப்பு: ஊத்துக்கோட்டை – திருவள்ளூர் சாலை 10 ஆவது நாளாக துண்டிப்பு

புதன், 25 நவம்பர் 2015 (15:36 IST)
ஊத்துக்கோட்டை அருகே உள்ள பிச்சாட்டூர் அணை மீண்டும் திறக்கப்பட்டுள்ளதால் ஆரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது.


 

 
கன மழையால் ஊத்துக்கோட்டை அருகேயுள்ள பிச்சாட்டூரில் உள்ள ஆரணியார் அணை முழுவதுமாக நிரம்பி உள்ளது.
 
இதனால், கடந்த 16 ஆம் தேதி ஆரணி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் ஆரணி ஆற்று தரைப்பாலம் மூழ்கியதைத் தொடர்ந்து, ஊத்துக்கோட்டை - திருவள்ளூர் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
 
இந்நிலையில் கடந்த 2 நாட்களாக மழை இல்லாததால் அணை மூடப்பட்டது. இதனால், ஆற்றில் வெள்ளம் வடிய தொடங்கியது.
 
இதனால், வாகன போக்குவரத்து மீண்டும் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆந்திராவில் உள்ள சில பகுதிகளில் நேற்று மழை பெய்ததால், இதனால் பிச்சாட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகதித்தது.
 
எனவே, அணையில் இருந்து இன்று காலை ஆரணி ஆற்றில் வினாடிக்கு 3,000 கனஅடி வீதம் மீண்டும் தண்ணீர் திறக்கப்பட்டதால் ஆரணி ஆற்றில் மீண்டும் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது.
 
இதனால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக ஊத்துக்கோட்டை–திருவள்ளூர் போக்குவரத்து இன்றும் நிறுத்தப்பட்டுள்ளது.
 
கட்ந்த 10 நாட்களாக இந்த வழித்தடத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்