தனிநபர் விமர்சனம் - எனக்கு உடன்பாடு இல்லை: திருமாவளவன்

வியாழன், 7 ஏப்ரல் 2016 (05:05 IST)
தனிநபர் விமர்சனம் குறித்த விமர்சனத்தில் எனக்கு உடன்பாடு இல்லை என திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.
 

 
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சென்னை மதிமுக  தலைமை அலுவலகமான தாயகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது திமுக தலைவர் கருணாநிதி குறித்து கடும் விமர்சனம் செய்தார்.
 
இதனால், வெகுண்டெழுத்த திமுகவினர் தமிழகத்தின் பல பகுதிகளில் வைகோ கொடும்பாவியை எறித்து வருகின்றனர்.
 
இது குறித்து, விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கூறுகையில், திமுக தலைவர் கருணாநிதி குறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறிய கருத்து எனக்கு உடன்பாடில்லை. ஒருவரை ஜாதி ரீதியாக விமர்சிப்பது தேவையற்ற செயல் ஆகும் என்றார்.
 
மேலும், ஜாதி ரீதியாக திமுக தலைவர் கருணாநிதி குறித்து பேசியதற்கு வைகோவே மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளரா். இதனால் இதற்கு மேல் கருத்து சொல்ல இயலவில்லை என்றார். 

வெப்துனியாவைப் படிக்கவும்