பரோலில் வெளியே வரும் பேரறிவாளன்

வியாழன், 24 ஆகஸ்ட் 2017 (19:06 IST)
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனை பரோலில் விடுவிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


 

 
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 26 ஆண்டுகளாக சிறையில் இருந்து வருகிறார். பேரறிவாளனுக்கு பரோல் வழங்கக்கோரி கடந்த ஆண்டு அவரது தாயார் மற்றும் வழக்கறிஞர் தமிழக அரசுக்கு கடிதம் எழுதியது குறிப்பிடத்தக்கது. ஆனால் அப்போது பரோல் கிடைக்கவில்லை நிராகரித்துவிட்டனர்.
 
இந்நிலையில் தற்போது பேரறிவாளனை பரோலில் விடுவிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த தனது தந்தையை சந்திக்க பேரறிவாளன் பரோல் கோரியிருந்தார். அதற்கான அரசாணையை பிறப்பித்து வேலூர் மத்திய சிறைக்கு அனுப்பியது தமிழக அரசு.  30 நாட்கள் பரோல் வழங்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்