முன்னதாக 2011ல் அருப்புக்கோட்டையில் வென்று கல்வித்துறை அமைச்சராக இருந்த வைகைசெல்வன் தொகுதிக்கு எந்த நலத்திட்டங்களும் சரியாக செய்யாததால் மக்கள் அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் இதே தொகுதியில் வைகைசெல்வன் தோல்வியடைந்தார். இந்நிலையில் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுகிறார்.
இதற்காக அருப்புகோட்டைக்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்ற வைகைசெல்வனிடம் அப்பகுதி முதியவர் ஒருவர் “இத்தனை காலம் ஆட்சியில் இருந்து எங்கள் தொகுதிக்கு என்ன செய்தீர்கள்?” என கேள்வி எழுப்பியுள்ளார். உடனே அதிமுகவினர் அவரை அடித்து அந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.