வைரமுத்துவின் இந்த பேச்சு இளையராஜாவை தாக்கி பேசுவது போல இருப்பதாக சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டது. இந்தநிலையில் இளையராஜா குறித்து இனிமேல் பேசினால் நடப்பதே வேறு என்று இளையராஜாவின் தம்பியும், இயக்குனரும், இசையமைப்பாளருமான கங்கை அமரன் வைரமுத்துவிற்கு எதிராக ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார்.
இதன்மூலம், இளையராஜா - வைரமுத்து ஆகியோருக்கு இடையே நிலவும் கருத்து வேறுபாடு விவகாரத்தின் தனக்காக மக்கள் பேசத் தொடங்கியுள்ளதால், தான் அமைதியாக இருப்பதாகவும் விளக்கியுள்ளார்.