டீ கடையில் Paytm பணம் பரிவர்த்தனை: கலக்கும் வில்லேஜ் விஞ்ஞானிகள்!

வெள்ளி, 25 நவம்பர் 2016 (18:47 IST)
500, 1000 ரூபாய் நோட்டுகளுக்கு தடைவித்து புதிய 2000 ரூபாய் நோட்டு வெளியிடப்பட்டதில் இருந்து நாட்டில் சில்லரை தட்டுப்பாடு பெரும் பிரச்சனையாக உள்ளது. இந்த சில்லரை பிரச்சனையை சமாளிக்க திருச்செங்கோட்டில் டீ கடை ஒன்றில் Paytm மூலம் பணம் செலுத்தும் முறை அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.


 
 
ரூபாய் நோட்டு தட்டுப்பாட்டால் சிறு வணிகர்கள் முதல் பெரும் வணிகர்கள் வரை சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இதனால் அவர்களது தொழில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் ஒரு டீ கடை ஒன்றில் இந்த பிரச்சனைய சமாளிக்க Paytm மூலம் பணம் செலுத்தும் முறை பயன்படுத்தப்படுகிறது. இங்கு வடை, டீ, காபி, பண்டங்கள் வாங்குபவர்கள் சில்லரைக்கு கஷ்டப்படாமல் Paytm மூலம் பணம் செலுத்தலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்