25 மருத்துவக் குழுக்கள் மற்றும் நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டு காய்ச்சல் பாதித்த கிராமங்கள் மட்டுமின்றி அதனை சுற்றியுள்ள கிராமங்களிலும் வீடு வீடாக சென்று சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 8, 9ஆம் வகுப்பு படித்தவர்கள் எம்.பி.பி.எஸ். டாக்டர் போல ஊசி, மருந்து - மாத்திரை வழங்கியதால் காய்ச்சலின் தன்மை முற்றி உயிர் இழந்துள்ளனர்.
காய்ச்சலுக்கு அடுத்தடுத்து சிறுவர்கள் பலியானதை தொடர்ந்து போலி மருத்துவர்கள் பலர் ஓட்டம் பிடித்தனர். பொன்னேரி, பூந்தமல்லி, புழல், மீஞ்சூர் உள்ளிட்ட பல பகுதிகளில் செயல்பட்டு வந்த போலி டாக்டர்கள் கிளினிக்குகளை மூடி விட்டு ஓட்டம் பிடித்தனர்.