பாம்பனில் பலத்த சூறாவளி காற்று: 1 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

ஞாயிறு, 21 ஜூன் 2015 (13:05 IST)
ராமேசுவரம் கடல் பகுதியில் பலத்த சூறாவளி காற்று வீசி வருவதால் பாம்பன் துறைமுக அலுவலகத்தில் 1 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்பட்டது.
 
ஆந்திராவில் இருந்து நகர்ந்து, ஒடிசா கடல் பகுதிக்கு குறைந்தழுத்த தாழ்வு நிலை சென்றுள்ளது. இதனால் பாம்பன், ராமேசுவரம் கடல் பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று வீசி வருகிறது.
 
இதைத் தொடர்ந்து பாம்பன் துறைமுக அலுவலகத்தில் 1 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. எனவே மீனவர்கள் ஆழ்கடல் பகுதிக்கு சென்று மீன்பிடிக்க வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
 
கடலோர பகுதிகளில் வசிக்கும் மீனவர்கள் பாதுகாப்பாகவும், முன்எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும் என்றும் துறைமுக அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்