இந்திய ராணுவ வீரர்களின் செயல்பாட்டை உளவு பார்த்த ஸ்மெஷ்அப்: கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கம்

செவ்வாய், 15 மார்ச் 2016 (16:50 IST)
இந்திய ராணுவ வீரர்களின் செயல்பாட்டை உளவுபார்க்க பாகிஸ்தான் பயன்படுத்திய ஸ்மெஷ்அப் என்ற அப்பினை கூகுள் நிறுவனம் தனது பிளே ஸ்டோரில் இருந்து அதிரடியாக நீக்கியுள்ளது. 
 
பாகிஸ்தானின் ஐஎஸ்ஐயால் உருவாக்கப்பட்ட ஸ்மெஷ் அப் இந்திய ராணுவ வீரர்களின் செயல்பாட்டை உளவுபார்க்க அந்த அப்யை ஒற்றறியும் கருவியாக பாகிஸ்தான் பயன்படுத்தி வருகிறது என்று பிரபல ஆங்கில செய்தி சேனல் சமீபத்தில் கண்டுபிடித்தது. இதை செய்தியாக வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை அறிந்த கூகுள் நிறுவனம் உடனடியாக ஸ்மெஷ்அப்யை தனது பிளே ஸ்டோரில் இருந்து நீக்கியது
 
மேலும், இந்த ஸ்மெஷ்அப் மூலம் இந்திய ராணுவ வீரர்களின் சுமார்ட் போனுடன் இணைப்பை ஏற்படுத்த பயன்படுத்துகின்றனர். இதை பாகிஸ்தானின் உளவுப்பிரிவான ஐ.எஸ்.ஐ செய்து வருகிறது என்று அந்த ஆங்கில செய்தி சேனல் செய்தியை வெளியிட்டது. மேலும், இந்த அப்-பினால் பாதுகாப்பு படை வீரர்களின் கம்ப்யூட்டர்களில் உள்ள தகவல்கள் திருட பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்
 
நாம் இந்த அப்-பை ஒருமுறை பதிவிறக்கம் செய்துவிட்டால், அந்த அப் பயன்பாட்டுக்கு வந்ததும், நமது கைபேசிகளில் ஸ்டோர் செய்யப்பட்டு வைத்திருக்கும் அனைத்து தகவல்கள் திருடப்பட்டு நமது அனைத்து நடவடிக்கையும் கண்காணிக்கப்பட்டு வரும். மேலும், செல்போன் பேச்சு விபரங்களை ஒட்டு கேட்கப்படும்.
 
இதன்மூலம் தான் ஜனவரி மாதம் பதன்கோட் விமானப்படைத்தளம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதாக அந்த சேனல் தெரிவித்துள்ளது.
 
பாகிஸ்தானின் கராச்சியை நகரைச் சேர்ந்த ஒருவரால் இயக்கப்படும் இந்த அப் மூலம் சேகரிக்கப்படும் தகவல்கள் அனைத்தும் ஜெர்மனியில் உள்ள சர்வர் ஒன்றில் பாதுகாக்கப்பட்டு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்