அசல் ஓட்டுனர் உரிமம் அவசியம் இல்லை - உயர் நீதிமன்றம் அதிரடி

Webdunia
வெள்ளி, 1 செப்டம்பர் 2017 (12:26 IST)
ஓட்டுனர்கள் அசல் உரிமம் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.


 

 
சில தினங்களுக்கு முன்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், வாகன ஓட்டிகள் அசல் உரிமம் வைத்திருக்க வேண்டும் என தலைமை நீதிபதி கருத்து தெரிவித்திருந்தார். 
 
அதன்படி தமிழகத்தில் ஓட்டுனர்கள் அனைவரும் அசல் உரிமம் வைத்திருக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அசல் உரிமம் இன்று முதல் கட்டாயமாக்கப்பட்ட நிலையில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி துரைசாமி, மோட்டார் வாகன சட்டம் பிரிவு 139ன் படி ஓட்டுனர் அசல் உரிமம் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என கருத்து தெரிவித்துள்ளார்.
 
அதோடு, திடீரென இந்த முடிவு எடுக்கப்பட்ட வேண்டிய காரணம் என்ன எனவும் அவர் கேள்வி எழுப்பினார். தமிழக அரசின் விளக்கத்தை பெறுவதற்காக இந்த வழக்கை இன்று மாலை வரை ஒத்தி வைத்து அவர் தீர்ப்பளித்துள்ளார்.
 
தமிழக அரசின் விளக்கத்திற்கு பின்னரே இறுதியான தீர்ப்பு வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்