சென்னை திருவொற்றியூரில் அதிமுக சார்பில் மாதவரம் தொகுதியில் போட்டியிடும் வி.மூர்த்தி, திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடும் கே.குப்பன் உள்ளிட்டோருக்கு வாக்கு சேகரித்து ஓ.பி.எஸ்.பிரச்சாரம் மேற்கொண்டார்.
திருவொற்றியூரின் பிரசிக்தி பெற்ற வடிவுடையம்மன் ஆலயத்தில் தரிசனம் மேற்கொண்டு தனது முதல் பிரச்சாரத்தை துவக்கினார். அப்போது பேசிய அவர், 2006ல் திமுக தலைமையில் அமைந்த ஆட்சியில் ஐந்து வருடமும் மின்சார தட்டுப்பாடு தான் இருந்தது, அடுத்து 2011 ஆம் ஆண்டு வந்த அம்மாவின் ஆட்சியில் மின்சார தட்டுப்பாடு இல்லாமல் சரி செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.
ஆணும் பெண்ணும் சமம் என பெரியார் கண்ட கனவினை பெண்களுக்கான பல்வேறு திட்டங்கள் மூலம் அதிமுக அரசு நிறைவேற்றிக் கொண்டிருப்பதாகவும், திமுக ஆட்சியில் ஏதாவது உருப்படியான திட்டம் கொண்டு வந்துள்ளார்களா என கேள்வி எழுப்பினார். அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், நிச்சயமாக அனைவருக்கும் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும், எனவும் வாஷின் மிஷின் உள்பட தேர்தல் அறிக்கையில் அளித்துள்ள அனைத்து வாக்குறுதிகளையும் நிச்சயம் நிறைவேற்றுவோம் என உறுதியளித்தார்.
மேலும், கொரனா நோய் மீண்டும் பரவுவதாகவும், மக்கள் அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும் உங்கள் வேண்டுகோள் விடுத்தார்.