கட்டாயப்படுத்தி முதல்வர் ஆக்கினார்கள்!.. கொளுத்திப்போட்ட ஓபிஎஸ்!...

BALA

செவ்வாய், 24 பிப்ரவரி 2026 (14:55 IST)
அதிமுக ஆட்சியில் 3 முறை முதல்வராக இருந்தவர் ஓ.பன்னீர் செல்வம். ஆனால், அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கினார் பழனிச்சாமி. அதன்பின் அதிமுக தொண்டர்கள் மீட்பு குழு என்கிற இயக்கதை உருவாக்கி செயல்பட்டு வந்தார். எப்படியாவது மீண்டும் அதிமுகவில் இணைந்துவிட வேண்டும் என முயற்சிகள் செய்தார் ஆனால், அது நடக்கவில்லை. தேர்தல் நெருங்கும் நிலையில் அதிமுக உள்ள தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவும் முயற்சி செய்தார். அதும் நடக்கவில்லை. ஏனெனில், பழனிச்சாமி அதை அனுமதிக்கவில்லை.

அந்த கோபத்தில்தான் சமீபத்தில் ‘திமுக 5 வருடங்கள் சிறப்பாக ஆட்சி செய்துள்ளது.. எனவே, மீண்டும் திமுகவே ஆட்சி அமைக்கும்’ என்று சொல்லி தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு வாழ்த்து சொன்னார். மேலும் சட்டசபையில் பேசிய ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏ ஐயப்பன் ‘ஜெயலலிதா, ஓபிஎஸ் ஆகியோரின் வாழ்த்துக்களுடன் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் ஆட்சி அமைப்பார்’ என கூறியிருந்தார்.

எனவே, ஓபிஎஸ் திமுக கூட்டணியில் இணைவார் அல்லது திமுக கட்சியில் சேர்ந்துவிடுவார் என பலரும் நினைத்தார்கள்.ஒருபக்கம், ஓபிஎஸ் தரப்புக்கு திமுக 2 தொகுதிகளில் போட்டியிட சீட் கொடுக்கப்போவதாகவும் செய்திகள் வெளியானது. இது அதிமுகவினருக்கு கோபத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில், ஜெயலலிதாவின் 78வது பிறந்தநாளான இன்று தேனியில் செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ‘கட்சிக்கு சோதனை வந்தபோது ஜெயலலிதா முதலமைச்சரின் பதவியை எனக்கு கொடுத்தார்.. ஆனால் அவர் இறந்த பின் என்னை கட்டாயப்படுத்தி தலமைச்சர் ஆக்கினார்கள்.. கட்டாயத்தின் பெயரில் தான் நான் மூன்றாவது முறை முதலமைச்சர் ஆனேன்.. நான் ஜெயலலிதாவுக்கு எந்த நம்பிக்கை துரோகமும் செய்யவில்லை.. அவர் எனக்கு கொடுத்த முதலமைச்சர் பதவியை நிறைவாக முடித்த நிம்மதியும், மகிழ்ச்சியும் எனக்கு இருக்கிறது’.

கடந்த இரண்டு தேர்தல்களிலும் பழனிச்சாமி தலைமையிலான அதிமுக தோல்வியை சந்தித்தது.. தற்போதும் அதே நிலைதான் இருக்கிறது’ என்று கூறினார். அப்போது ‘ எடப்பாடி பழனிச்சாமி மனம் மாறி உங்கள் அழைத்தால் இணைவீர்களா?’ என நிருபர் ஒருவர் கேட்டார்.. அதற்கு ‘மதியாதார் தலைவாசல் மிதியாதே’ என ஔவையார் கூறியிருக்கிறார்’ என பதிலளித்துவிட்டு சென்றார் ஓபிஎஸ்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்