ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் அதிமுக சார்பாக டி.டி.வி. தினகரன் போட்டியிடுகிறார். திமுக சார்பில் மருதுகணேஷ் அறிவிக்கப்பட்டுள்ளார். அதேபோல், ஜெ.வின் அண்ணன் மகள் தீபாவும் போட்டியிடுகிறார். ஓ.பி.எஸ் அணி சார்பில், அவைத் தலைவர் மதுசூதனன் போட்டியிடுகிறார்.
இந்நிலையில் அதிமுக பிரச்சாரப் பேச்சாளரான நாஞ்சில் சம்பத், சமீபத்தில் அளித்த பேட்டியில் “ காலில் விழுந்தே காரியம் சாதித்தவர் ஓ.பி.எஸ். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அவரது அணி வேட்பாளர் 150 ஓட்டுகளில் இருந்து 300 ஓட்டுகள் வரைதான் வாங்குவார். திமுகவோடு கூட்டு சேர்ந்து கொண்டு அவர் அதிமுகவை அழிக்க துடிக்கிறார். அதிமுக தொண்டர்கள் அவர் மீது கோபமாக இருக்கிறார்கள். அவரது அணியை மக்கள் புறக்கணிப்பார்கள்” என்று அவர் கூறினார்.