வீடுகளை இடிக்க எதிர்ப்பு..! பாதிக்கப்பட்டவர்கள் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி போராட்டம்..!!

Senthil Velan

வெள்ளி, 1 மார்ச் 2024 (22:13 IST)
கடலூர் அருகே வீடுகளை இடிக்கச் சென்ற மாநகராட்சி அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து சிறுவர்கள் உட்பட அக்குடும்பத்தினர் தங்கள் மீது மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
 
கடலூர் வண்டிப்பாளையம் அடுத்த குழந்தைகாலனி பகுதியில் தேவநாதன் மற்றும் வெங்கடேசன் ஆகிய இரு குடும்பத்தினர் பல ஆண்டுகளாக வசித்து வந்த நிலையில்,தனியார் நிலத்திற்கு செல்லும் சாலை புறம்போக்கு இடத்தில் ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டி உள்ளதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
 
இதனையடுத்து  நீதிமன்றம்  வீடுகளை இடித்து அகற்ற உத்தரவிட்டதன் பெயரில் மாநகராட்சி பணியாளர்கள் அங்கு வீடுகளை காலி செய்ய நோட்டீஸ் வழங்கி இதனால் வரை வீடுகளை காலி செய்யாததால் மாநகராட்சி பணியாளர்கள் அங்கு நேரடியாக சென்று பொக்லைன் இயந்திரத்துடன் வீடுகளை இடிக்க சென்றனர். 
 
அப்பொழுது இரண்டு குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் திடீரென தங்கள் உடலில் மண்ணெண்ண ஊற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
மேலும் அவர்களுக்கு ஆதரவாக அப்பகுதி மக்களும் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் மாநகராட்சி அதிகாரிகள் வீடுகளை இரண்டு நாட்களுக்குள் காலி செய்ய வேண்டும் என கூறி புறப்பட்டனர்.

இதனை அடுத்து அந்த இரண்டு குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று அங்கு ஆட்சியர்  அறைக்கு முன்னால் மீண்டும் தங்கள் குழந்தைகள் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஐந்து பேர் மண்ணெண்ணெய் ஊற்றி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ALSO READ: அதிமுக - தேமுதிக பேச்சுவார்த்தையில் இழுபறி..! தேமுதிகவிற்கு 4 தொகுதிகள் ஒதுக்க முடிவு.?
 
தகவல் அறிந்து வந்த போலீசார் அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். பல ஆண்டுகளாக வசித்து வரும் இடத்திலிருந்து திடீரென காலி செய்ய சொன்னால்  தங்கள் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடும் என கூறினர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்