மெட்ரோ ரயில் ஓடினாலும் டோக்கன் தரப்படமாட்டாது: பரபரப்பு தகவல்

ஞாயிறு, 30 ஆகஸ்ட் 2020 (20:09 IST)
தமிழகம் உள்பட பல மாநிலங்களில் விரைவில் மெட்ரோ ரயில் ஓட போவதாக அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளி வந்துள்ளது என்பது தெரிந்ததே. தமிழகத்தில் செப்டம்பர் 7ஆம் தேதி முதல் மெட்ரோ ரயில் ஓடும் என்று தமிழக அரசு சற்று முன் அறிவித்தது 
 
இந்த நிலையில் டெல்லியில் மெட்ரோ ரயிலை 7ஆம் தேதி முதல் இயக்க இருப்பதாகவும் முதல் கட்டமாக அரசு அதிகாரிகளுக்கு மட்டும் மெட்ரோ சேவையை ஆரம்பிக்க உள்ளதாகவும் டெல்லி அரசு தெரிவித்துள்ளது
 
இந்த நிலையில் மெட்ரோ ரயில் இயங்கினாலும் பயணிகளுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பத்தை பரிசோதித்த பின்னரே அனுமதிக்கப்படுவர் என்றும், பயணிகள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், பயணிகளிடையே சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் மத்திய அரசு வெளியிட்டு இந்த மெட்ரோ சேவை வழிகாட்டு நெறிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது
 
அதேபோல் மெட்ரோ ரயில்வே ஸ்டேஷன்களில் டோக்கன்கள் கிடையாது என்றும் பணப்பரிவர்த்தனைகள் முற்றிலும் தவிர்க்கப்படும் என்றும் முழுக்க முழுக்க டிஜிட்டல் பரிவர்த்தனை மட்டுமே பயணிகள் பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகளில் மூலம் ரயில் டிக்கெட் கட்டணத்தை செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்