"50 சதவீதம் பெண்களுக்கு மட்டுமே" - அதிரடிக்கு தயாராகும் ஜெயலலிதா

கே.என்.வடிவேல்

ஞாயிறு, 12 ஜூன் 2016 (17:25 IST)
உள்ளாட்சித் தேர்தலில் 50 சதவீதம் பெண்களுக்கு மட்டுமே சீட் வழங்க முதல்வர் ஜெயலலிதா சீக்ரெட் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 

 
நடைபெற்ற சட்டசபை தேர்தலில் அதிமுக 134 தொகுதிகளை கைப்பற்றி, ஆட்சி அமைத்தது. முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றார்.
 
இந்த நிலையில், விரைவில் உள்ளாட்சித் தேர்தல் வரஉள்ளது. அக்டோபர் மாதம் நடைபெறுகிறது. இந்த உள்ளாட்சி தேர்தலிலும், அதிக இடங்களை கைப்பற்ற, ஆளுங்கட்சியான அதிமுக தற்போது களத்தில் இறங்கி வியூகங்களை வகுத்துள்ளது.
 
இதனையடுத்து, தமிழகத்தில் உள்ள பெண்கள் கவரும் வகையில்,  இந்திய அரசியல் வரலாற்றில், யாரும் செய்யாத, செய்யமுடியாத புதுமையான சாதனையான, உள்ளாட்சித் தேர்தலில் 50 சதவீதம் பெண்களுக்கு மட்டுமே வழங்க முதல்வர் ஜெயலலிதா முடிவு செய்துள்ளதாக அதிமுக வட்டாரத்தில் கூறப்படுகிறது. இதனால், அதிமுகவில் உள்ள பெண்கள் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளர்.
 
இதை அப்படியே முதல்வர் ஜெயலலிதா செயல்படுத்தினால், எதிர்கட்சிகள் அவர்களது கட்சியில் பெண் வேட்பாளர்களை தேடி கண்டிபிடிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார்கள்.  
 

வெப்துனியாவைப் படிக்கவும்