ஆகஸ்ட் 1 முதல் டிவி-யில் க்ளாஸ்: செங்கோட்டையன் அறிவிப்பு!

வியாழன், 23 ஜூலை 2020 (11:41 IST)
இந்தியாவில் தொலைக்காட்சி மூலம் பாடம் நடத்தும் முதல் மாநிலம் தமிழகம் தான் எனவும் அமைச்சர் செங்கோட்டையன் பெருமிதம். 
 
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பால் பள்ளிகள் மூடப்பட்ட நிலையில் 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளுக்கு தேர்வின்றி தேர்ச்சி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அடுத்தக்கட்ட பாடங்களை தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலமாக தங்களது மாணவர்களுக்கு நடத்த தொடங்கியுள்ளன. 
 
இதனால் அரசு பள்ளி மாணவர்களுக்கும் பாடம் நடத்த அரசு ஏற்பாடுகளை செய்து வருகிறது. ஆன்லைன் மூலமாக படிக்க அனைத்து மாணவர்களுக்கும் வசதி இருக்காது என்பதால் தொலைக்காட்சி வழியாக பாடம் நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. 
 
இந்நிலையில் தொலைக்காட்சி மூலம் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் தொலைக்காட்சிகளின் மூலமாக பாடம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். அதோடு, இந்தியாவில் தொலைக்காட்சி மூலம் பாடம் நடத்தும் முதல் மாநிலம் தமிழகம் தான் எனவும் பெருமிதம் கொண்டுள்ளார். 
 
மேலும், மாணவர்களுக்கு தொலைக்காட்சி வாயிலாக பாடம் நடத்த 14 சேனல்கள் பாடங்களை ஒளிபரப்ப முன் வந்துள்ளனர் இவற்றில் பாடங்கள் ஒளிபரப்பபடும் என்பது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்