தேர்தலை புறக்கணிக்க போவதாக ஒரு லட்சம் பேர் அறிவிப்பு: ஏலகிரியில் பரபரப்பு!

திங்கள், 23 நவம்பர் 2020 (18:40 IST)
தேர்தலை புறக்கணிக்க போவதாக ஒரு லட்சம் பேர் அறிவிப்பு
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது. இந்த நிலையில் திடீரென ஏலகிரியில் ஒரு லட்சம் பேர் சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
சட்டமன்றத் தேர்தல் விரைவில் வரவிருக்கும் நிலையில் பல கிராமங்களில் உள்ள மக்கள் தங்களுக்கு தேவையான வசதிகளை கேட்டுப் பெறுவதில் குறியாக உள்ளனர். தேர்தலுக்கு முன்னரே தங்களுடைய கோரிக்கைகளை வைத்தால் அவை உடனடியாக நிறைவேற்றப்படும் என்றும் தேர்தலுக்குப் பின்னர் அரசியல்வாதிகள் கண்டு கொள்ள மாட்டார்கள் என்பதையும் மக்கள் சரியாக புரிந்து வைத்துள்ளனர் 
 
அந்த வகையில் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலையில் உள்ள 48 கிராமத்தைச் சேர்ந்த மலைவாழ் மக்கள் தங்களுக்கு ஜாதி சான்றிதழ் வழங்கவில்லை என்று குற்றஞ்சாட்டியுள்ளனர் 
 
அந்த 48 கிராமத்தைச் சேர்ந்த ஒரு லட்சம் மலைவாழ் மக்களுக்கும் ஜாதி சான்றிதழ் வழங்கவில்லை என்றால் வரும் சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவித்துள்ளனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தலில் 48 கிராம மக்களின் வாக்குகளை பெறுவதற்காக விரைவில் அவர்களுக்கு ஜாதி சான்றிதழ் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்