சென்னையில் 16ம் தேதி ஆம்னி பேருந்துகள் ஓடாது

புதன், 14 செப்டம்பர் 2016 (21:46 IST)
காவிரி விவகாரத்தில் கர்நாடகாவிற்கு எதிராக தமிழகத்தில் வருகிற முழு கடையடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். அதற்கு ஆம்னி பேருந்துக்களும் ஆதரவு அளித்துள்ளனர்.
 


 


கர்நாடகாவில் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற வன்முறை சம்பவங்களுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், வருகிற 16ம் தேதி தமிழகத்தில் கடையடைப்பு போராட்டத்திற்கு தமிழ்நாடு வணிக சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
 
இந்நிலையில், 16ஆம் தேதியன்று அனைத்து கடைகளும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு ஆதரவு அளிக்கும் வகையில் பெட்ரோல் பங்க், ஆம்னி பேருந்துகள் என அனைவரும் ஆதரவு அளித்துள்ளனர்.
 
மேலும், காவிரி விவகாரத்தில் நாளை மறுநாள் நடைபெறும் வேலைநிறுத்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஆம்னி பேருந்துகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன.
 
அதேபோன்று, நாளை மறுநாள் சென்னை கோயம்பேட்டில் உண்ணாவிரதப் போராட்டமும் நடைபெறும் என்று சங்கச் செயலாளர் ஏ. அன்பழகன் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்