மத்திய பட்ஜெட்டில் சேவை வரி விதிப்பு: ஆம்னி பஸ் கட்டணம் உயர்கிறது

வெள்ளி, 11 ஜூலை 2014 (13:09 IST)
மத்திய பட்ஜெட்டில் குளிர் சாதன வசதியுடன் கூடிய ஒப்பந்த பேருந்துகளுக்கு சேவை வரி புதிதாக விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆம்னி ஏ.சி. பஸ்களுக்கு கட்டணம் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
 
ஆம்னி பஸ் ஆபரேட்டர்கள் ஒப்பந்த அடிப்படையில் மாநில அரசுக்கு 3 மாதத்திற்கு ஒரு முறை வரி செலுத்தி பஸ்களை இயக்கி வருகிறார்கள்.
 
ரயிலில் உள்ளிருப்பு ஏ.சி. படுக்கை வசதி எப்படி உள்ளதோ அதை விட கூடுதலான வசதிகள் இப்போது ஆம்னி சொகுசு பஸ்களில் கிடைக்கின்றன. இதனால் ஐ.டி. மற்றும் பல்வேறு நிறுவனங்களில் பணி புரிபவர்கள், தொழில் அதிபர்கள், விற்பனை பிரதிநிதிகள், வசதி படைத்தவர்கள் ஆம்னி பஸ்களை அதிகளவு பயன்படுத்தி வருகிறார்கள்.
 
மத்திய பட்ஜெட்டில் ஆம்னி ஏ.சி. பஸ்களுக்கு சேவை வரி விதிக்கப்பட்டு இருப்பதால் கட்டணம் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
 
இதேபோல பட்ஜெட்டில் தொழில் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீட்டிலிருந்து அலுவலகங்களுக்கு அழைத்து வர பயன்படுத்தப்படும் ஒப்பந்த ஏசி பஸ்களுக்கும் சேவை வரி விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்