வங்கியில் கொள்ளையடித்த பணத்த தெருவில் வீசிய முதியவர் !

வியாழன், 26 டிசம்பர் 2019 (17:35 IST)
அமெரிக்காவில் வசிக்கும் ஒரு முதியவர், வங்கியில் கொள்ளை அடித்த பணத்தை மக்கள் வசிக்கும் இடத்தில் வீசிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
அமெரிக்க நட்டில் கொலராடோ மாகாணத்தில் அகாடமி என்ற வங்கி இயங்கி வருகிறது. இந்நிலையில், நேற்று முந்தினம் (24-12-19) இந்த வங்கியில் நுழைந்த டேவிட் வேன் என்ற  முதியவர், தான் ஆயுதம் வைத்துள்ளதாகவும், கிட்ட வந்தால் கொன்று விடுவதாகவும் ஊழியர்களை மிரட்டி, வங்கியில் இருந்த பணத்தை கொள்ளை அடித்துச் சென்றுள்ளார். அவர் கொள்ளையடித்துச் சென்ற பணம் பல லட்சங்கள் என தெரிகிறது.
 
இந்நிலையில், வங்கியில் இருந்து வெளியே வந்த முதியவர் மக்கள் கூடியிருக்கும் இடத்தில் பணத்தை வீசி எறிந்து, எல்லோருக்கும் கிருஸ்துமஸ் வாழ்த்துகள் கூறினார். மக்கள் அந்தப் பணத்தை எடுத்துக் கொண்டனர். இதுகுறித்து வங்கி ஊழியர்கள் போலீஸாருக்கு தகவல் அளித்தனர். அங்கு விரைந்து வந்த போலீஸார் முதியரை தேடினர். அவர் அங்குள்ள ஒரு காபி ஷாப்பில் டீ குடித்துக் கொண்டிருந்தார். அவரிடம் விசாரித்ததற்கு , அவர் தன் குற்றத்தை அவர் ஒப்புக் கொண்டார். இதையடுத்து போலீஸார்  அவரைக் கைது செய்தனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்