முதல்வர் பன்னீர்செல்வத்துடன் அமெரிக்க தூதர் சந்திப்பு

செவ்வாய், 21 அக்டோபர் 2014 (19:52 IST)
தமிழக முதல்வர் பன்னீர்செல்வத்தை, தலைமைச் செயலகத்தில் இன்று அமெரிக்க தூதர் சந்தித்துப் பேசினார்.
 
தமிகம் வந்துள்ள அமெரிக்க தூதர் கேத்லீன் ஸ்டீபன்ஸ், தனது உதவியாளருடன் சென்னை தலைமைச் செயலகத்துக்கு வந்தார். அங்கு, முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை சந்தித்துப் பேசினார்.
 
இந்த சந்திப்பின் போது, தமிழகம் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள 2023 தொலைநோக்கு திட்டம் குறித்த கையேட்டினை முதல்வர், அமெரிக்க தூதரிடம் அளித்தார்.
 
வெளிநாட்டு முதலீடுகளை பெறுவதில் தமிழகம் முன்னோடியாக இருப்பதாக பன்னீர்செல்வம் குறிப்பிட்டார்.
 
தமிழகத்தில், அமெரிக்க முதலீட்டுடன் இயங்கி வரும் பல்வேறு நிறுவனங்களின் வெற்றிகரமான செயல்பாடுகள் குறித்தும் இந்த சந்திப்பின் போது பேசப்பட்டது.
 
மேலும், சென்னையில் இயங்கும் அமெரிக்க தூதரகம் மூலம், ஏராளமான வேலை வாய்ப்பு விசாக்கள் வழங்கப்படுவதாகவும், உலகில் உள்ள அமெரிக்க தூதரகங்களிலேயே எப்போதும் பரபரப்பாக இருக்கும் தூதரகங்களில் சென்னை தூதரகமும் ஒன்று என்றும் அமெரிக்க தூதர் குறிப்பிட்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்