தமிழகம் முழுவதும் பயன்பாட்டில் உள்ள சுமார் 2 கோடி குடும்ப அட்டைகளின் ஆயுட்காலம் டிசம்பர் மாதத்துடன் முடிவடிகிறது. இந்நிலையில், அடுத்த ஆண்டு (2017) முதல் புதிய ரேஷன் கார்டு ‘ஸ்மார்ட் கார்டு’ வடிவில் வழங்க அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதில், ’குடும்பதாரர்கள் தங்கள் மாவட்டத்தில் உள்ள கடைகளுக்குச் சென்று குடும்ப அட்டையில் முழுமையாக விவரங்களை பெற்று வருகிற 30ம் தேதிக்குள் உரிய நடவடிக்கை எடுத்து அதன் முழு விவரத்தையும் தெரிவிக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.