அதிமுக - பாமக - தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் வரும் மக்களவைத் தேர்தலில் 10 இடங்கள் மற்றும் 1 மாநிலங்களவை பதவி வழங்க வேண்டும் என அதிமுகவிடம் பாமக கோரியுள்ளது. அதேபோல் நேற்று தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடந்த நிலையில், அக்கட்சி சார்பில் 7 மக்களவை தொகுதி மற்றும் 1 மாநிலங்களவை இடம் கேட்கப்பட்டுள்ளது
ஆனால் பாமகவுக்கு 7 தொகுதிகளும், தேமுதிகவுக்கு 4 தொகுதிகளும் வழங்க தயாராக இருப்பதாக அதிமுக தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் இரு கட்சிகளுக்கும் மாநிலங்களவை இடம் வழங்க முடியாது என அதிமுக திட்டவட்டமாக தெரிவித்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.