இந்த நிலையில் சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு அலுவலகம் இல்லை என்றும், எங்களுக்கென அலுவலகம் இல்லாததால் நாங்கள் நடுத்தெருவில் இருக்கிறோம் என்றும் அதிகாரிகள் தனக்கு ஒத்துழைக்க மறுத்ததாகவும் பொன் மாணிக்கவேல் உயர்நீதிமன்றத்தில் புகார் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் நீதிமன்ற உத்தரவை மதிக்காமல அரசு செயல்படுவதால் தலைமை செயலாளரை ஆஜராக உத்தரவிட நேரிடும் என்றும், அரசு துறையை அரசே முடக்குவது எந்தவிதத்தில் நியாயம் என்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியதோடு, பொன் மாணிக்கவேலின் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கும் அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட நேரிடும் என்றும் தெரிவித்தனர். மேலும் சிலைக்கடத்தல் தொடர்பான வழக்கை ஜனவரி 9ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்