தமிழகத்தில் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த மாட்டோம் என்றும் மும்மொழி கொள்கை கடைபிடிக்கப்படாது என்றும் திமுக அரசு உறுதியாக கூறிவரும் நிலையில் தனியார் சிபிஎஸ்இ பள்ளிகளில் மட்டும் மும்மொழி கொள்கைக்கு அனுமதிப்பது ஏன் அரசு பள்ளி மாணவர்கள் கொள்கையை படிக்க தடைப்பது ஏன் என்ற கேள்வியை பாஜக கேள்வி எழுப்பி வருகின்றது.
நேற்று, தமிழகத்தின் பள்ளிக் கல்வி அமைச்சர், பல மொழிகளைக் கற்றுக் கொடுப்பதைப் பாடத்திட்டமாகக் கொண்ட ஒரு தனியார் CBSE பள்ளியில் நடந்த விழாவில் கலந்து கொண்டார். ஆனால், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பல மொழிகள் கற்கும் வாய்ப்பு கிடையாது என்று கூறுகிறார்.