பொன்முடி வழக்கிற்கும், பாஜகவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை: அண்ணாமலை

வியாழன், 21 டிசம்பர் 2023 (17:33 IST)
முன்னாள் அமைச்சர் பொன்முடி வழக்கிற்கும்,  பாஜகவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என சென்னை விமான நிலையத்தில் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை பேட்டி அளித்துள்ளார். 
 
திமுக அமைச்சர்கள் மீது உள்ள வழக்குகளை, நீதிமன்றத்திற்குச் சென்று இல்லை என்று நிரூபித்தால்  நாங்கள் அதனை வரவேற்கிறோம் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
 
மேலும் நாடாளுமன்ற உறுப்பினர்களை இடைநீக்கம் செய்யக்கூடாது என விதிமுறைகள் உள்ளதா? என கேள்வி எழுப்பிய அண்ணாமலை 1998-ம் ஆண்டுக்குப் பிறகு தற்போது தான் மீண்டும் அதிகமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்கள் என்று தெரிவித்தார்.
 
மேலும் திமுக அரசு மழை வெள்ளத்தைப் பொறுத்தவரை சரியாக கையாளவில்லை என்றும், தென் மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு நிவாரணத்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று கேள்வி ஒன்றுக்கு பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை கூறினார்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்